மாணவிகளுக்கு மாதம் ரூ1000!! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!

 
மாணவிகள் அரசு பள்ளி

தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கவும் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணம் உதவித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  ‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள், உயர்கல்வியில் சேர்ந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உறுதித்தொகை பெறுவர். 12-ம் வகுப்பை முடித்து விட்டு அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து தங்களது உயர் கல்வியை மாணவிகள் தொடரலாம்.

இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைத்தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 முதல் 11-ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது. மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார் கார்டு மற்றும் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறி இருந்தால் அவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web