குழந்தை பெத்துக்கிட்டா ரூ.3 லட்சம் மானியமா.? பிறப்பை அதிகரிக்க புதிய திட்டம்!!

 
கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  ஹங்கேரியின் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது. நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லாமல் கடனாக வழங்கப்பட்டது.

குழந்தை

அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு அந்த கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே சமயத்தில் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் என புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. மேலும் அந்நாட்டு நிதி அமைச்சர் கட்சுனோபு கட்டோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாணவிக்கு பிறந்த குழந்தை

அந்த அறிவிப்பில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகள் அரசு வழங்கு வழக்குகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு  4 லட்சத்து 20 ஆயிரம் யென் அதாவது இந்திய மதிப்பில்  2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் இந்திய மதிப்பில் ரூ 49 ஆயிரம் அதனை 5 லட்சம் யென் இந்திய மதிப்பில் சுமார் ரூ 3 லட்சம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்

From around the web