பைக்கில் வைத்த ரூ 4 லட்சம் நகைகள் நூதன கொள்ளை!! பட்டப்பகலில் பயங்கரம்!!

 
பைக் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல் ராவந்தவாடி செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 6-ம் தேதி செங்கம் ராஜவீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் அடகு வைத்திருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டு தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

திருட்டு நகைகள் கொள்ளை

வீட்டிற்கு செல்லும் வழியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி பேக்கரியில் தின்பண்டங்க்ளை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தை கடையின் வாசலில் நிறுத்திவிட்டு மனைவியோடு கடைக்குள்ள சென்றுள்ளார். திண்பண்டங்களை வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைக்க முயன்ற போது தான் பெட்டியில் வைத்திருந்த நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேக்கரியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது , அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் இருசக்கர வாகனம் அருகே சென்று பெட்டியிலிருந்து நகையை எடுத்துக்கொண்டு மற்றொரு இளைஞரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றது தெரியவந்தது. 

திருவண்ணாமலை

இதில் இருசக்கர வாகனத்தின் பெட்டியின் பூட்டு உடைக்காமல் நூதன முறையில் பெட்டியை திறந்து நகை திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் நகையை பறிகொடுத்த முருகன் மற்றும் அவரது மனைவி பூஜ்ஜி அம்மாள் ஆகிய இருவரையும் நாள்தோறும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அலட்சியம் காட்டி வருவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web