SUPER!! பள்ளிக்கு வராத குழந்தைகளை மீண்டும் சேர்க்கும் திட்டம்!! பள்ளிக் கல்வித்துறை அதிரடி!!

 
மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் சமீபகாலமாக அதிகரித்து வருவதால்  பள்ளிகளில்  சமூக இடைவெளி,  முகக்கவசம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்திற்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள்

அதில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,  அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வ EMIS இணையதளம் அல்லது செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளி கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தை திருமணம், இடப்பெயர்வு போன்ற காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே நின்று விடுகின்றனர். இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள்

5, 8, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web