காதலி ஏமாற்றிய சோகம்! லைவ் வீடியோவுல கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்!

 
பே

எத்தனை திடகாத்திரமான மனிதராக இருந்தாலும், ஏமாற்றத்தையும், துரோகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் சிறுபிள்ளையைப் போல உடைந்து போகிறார்கள். ஆனால், அந்த ஒருத்தருக்காக மட்டுமா நாம் வாழ்கிறோம்? தற்கொலை மட்டுமே தீர்வு என்றால், உலக ஜனத்தொகை உயர்ந்திருக்காது. பாதிக்கும் மேற்பட்டோர் காலமாகி இருப்பார்கள். மன அழுத்தத்தைப் போக்க, உங்களுக்கு நம்பிக்கையான, நெருக்கமான யாராவது ஒருவரிடமாவது மனம் விட்டு பேசுங்க.. காதலித்து, நெருக்கமாக பழகி, ஒன்றாக ஊர் சுற்றிய காதலி, பணக்கார மாப்பிள்ளையை வீட்டில் தேர்வு செய்ததும், லைஃப்பில் செட்டிலாக காதலனைக் கழற்றி விடுவது சமீபமாக அதிகரித்து வருகிறது. கேரளாவில், அப்படி காதலனை விஷம் கொடுத்து கொலைச் செய்த காதலி ஒரு ரகம் என்றால், உத்தரபிரதேசத்தில் காதலனே.. எங்கிருந்தாலும் வாழ்க பாணியில், தன் உயிரை மாய்த்திருக்கிறார் 

பேஸ்புக் நேரலையில், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டு அதிர வைத்துள்ளார். உத்தரபிரதே மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரந்தர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவான்பூர் பகுதியில் வசிக்கும் இளைஞன் தனது காதலியை துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி பேஸ்புக் லைவ் மூலம் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

காதல் கள்ளக்காதல் காதலன் காதலி ரொமான்ஸ்

நேரலையின் போது, ​​அந்த இளைஞன் தனது காதலியின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக திட்டியுள்ளார். அந்த நேரத்தில், பலர் அவரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தனர், ஆனால் அவர் அதையும் மீறி வேதனையுடன் தனது உயிரைக் மாய்த்துக் கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், காதலித்த பெண்ணிற்கு, அவரது வீட்டில் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும், அதற்கு காதலியும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், பேஸ்புக் நேரலையில் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரைக் கூறியபடி, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிய வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web