தந்தை கண் முன்னே சோகம்! 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

 
ஆனந்தி

காதல் விவகாரம் தந்தைக்குத் தெரிந்து கண்டித்ததால், ‘நீட்’ தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி, பயிற்சி மைய கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயரமான மாடியிலிருந்து குதித்ததில் பலத்த காயம் அடைந்த மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைச் பெற்று வருகிறார். 

திருப்பூர், காங்கயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (48). இவருடைய மகள் ஆனந்தி (18).  படியூரில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்திருந்த மாணவி ஆனந்தி, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் திருப்பூர் பஸ் நிலையம் அருகே தனியார் போட்டித் தேர்வு பயிற்சி நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் படித்து வருகிறார். 

ஆனந்தி

இந்நிலையில், நேற்று மாலை மணிகண்டன், பயிற்சி மையத்துக்கு வந்து,  மகள் ஆனந்தியை அழைத்து செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தில் 2வது மாடியில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. 

ஆனந்தி, அந்த பகுதியில் ஒருவரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலன், பயிற்சி மையத்துக்கு வந்து ஆன்ந்தியை சந்தித்த போது, மகளை அழைத்து செல்ல வந்திருந்த தந்தை, இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பயிற்சி வகுப்பில் இருந்து மகளை அழைத்து செல்வதற்காக நேற்று மாலை ஆனந்தியின் தந்தை மணிகண்டன் அங்கு வந்துள்ளார். அப்பொழுது ஆனந்தி பயிற்சி வகுப்புகள் முடிந்த நிலையில், கழிவறைக்குச் செல்வதாக கூறி விட்டு, 3வது மாடிக்கு சென்று அங்கிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ஏராளமான ரத்தம் வீணானது. வலியில் அவரும் அலறி துடித்து இருக்கிறார்.  கண் இமைக்கும் நேரத்தில் ஆனந்தி, 3வது மாடியில் இருந்து கீழே குதித்ததில், மண்டை உடைந்து ரத்தம் சிதறியது.

மகள் திடீரென மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததைப் பார்த்து மணிகண்டன் அலறியடித்து கொண்டு, கீழே ஓடிச் சென்று ஆனந்தியை மடியில் போட்டு அழுது புரண்டார். உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றார். 

ஆனந்தி

ஆனந்தியின் பின்தலை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயமடைந்துள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் இந்த திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பழைய பஸ் நிலையம் அருகே 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web