சசிகலா வீட்டில் பரபரப்பு!! விவேக் மனைவி தற்கொலை முயற்சி!!

 
விவேக் சசிகலா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவருடைய  அண்ணன் மகன் விவேக். இவர் ஜாஸ் சினிமா உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி  கீர்த்தனா. இவருடைய திருமணம் நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விவேக் திருமணத்துக்கு செல்லவில்லை.தற்போது, விவேக் ஜெயராமன் தன்னுடைய மனைவி கீர்த்தனாவுடன் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்.

கீர்த்தனா

கீர்த்தனாவின் வயது 28. தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறுகள், சச்சரவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில்,இவருடைய மாமியார் இளவரசி மற்றும் சசிகலாவிடம் இந்த பிரச்சனையை கீர்த்தனா கொண்டு சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் இருவருமே விவேக்கை அனுசரித்து செல்லவேண்டும் என அறிவுரை கூறினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேக் வீட்டிற்கு தாமதமாக வந்தார். அப்போது  விவேக்கிற்கும் கீர்த்தனாவுக்கும் இடையே வழக்கமான சண்டை தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை தீவிரமானது.

சசிகலா

விவேக்  எத்தனையோ சமாதானங்கள் கூறியும் கீர்த்தனா ஆறுதல் அடையவில்லை . இதனையடுத்து கீர்த்தனா வீட்டில் இருந்த, தேவையில்லாத மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி விட்டார். பேசிக்கொண்டே இருந்த கீர்த்தனா தானாக  சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். அதிர்ந்து போன விவேக் உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனையில் கீர்த்தனாவை சேர்த்தார். அங்கு கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின்படி, அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா ஆபத்தான நிலையில்  அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விவேக்கிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சசிகலா குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம், அதிமுக, அமமுக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக அமைந்து விட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web