அட்ரா சக்க!! சவரனுக்கு ரூ432 அதிரடி சரிவு!! நகைக்கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக தங்கம் அதிரடியான சரிவை சந்தித்து வருகிறது.  இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432  குறைந்து ரூ.37,008க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626க்கும், ஒரு சவரன் ரூ37008க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.61.60க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ61600க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் தொடர்ந்து முண்ணனியில் இருந்து வருகிறது. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதில் கடந்த வாரம் மட்டும் ஏறுமுகமாக இருந்து வந்தது.

தங்கம்

கடந்த வாரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4740க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.37920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் மக்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்த விலைக்குறைப்பு நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web