பேருந்து மோதி பள்ளி மாணவி பலி!! சுதந்திர தினவிழா கொண்டாடி விட்டு திரும்பிய போது சோகம்!!!

 
பேருந்து

இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

விபத்து

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை குரோம்பேட்டை ராஜேந்திராபுரம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் லட்சுமிஸ்ரீ (17) என்ற மாணவி ப்ளஸ் 2 படித்து வந்தார்.

இன்று பள்ளியில் சுதந்திர தின விழாவில் பங்கேற்று விட்டு சைக்கிளில் லட்சுமிஸ்ரீ வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் சென்ற அரசு பேருந்து லட்சுமிஸ்ரீ மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி லட்சுமிஸ்ரீ மீது பேருந்து ஏறியது. 

சிறுவன் பலி

இதில் மாணவி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சுதந்திர தினவிழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web