பள்ளி மாணவர்களுக்கு ‘டேப்’ கிடையாது! மீண்டும் வழங்க திட்டம்! அமைச்சர் தகவல்!

 
அன்பில் மகேஷ் மாணவர்கள்

மாணவர்களுக்கு, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி டேப் கொடுக்க முடியாது. அவை உடைந்து விடும். அவர்கள் கையாள்வதும் சிரமமாக இருக்கும். அதனால் மீண்டும் லேப்டாப் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக ஆட்சியிலிருந்த போது மாணவர்களின் நலனுக்காக எதையும் செய்ததில்லை என்றும்,  இந்நிலையில்  போதை விழிப்புணர்வு குறித்து தமிழகத்தில் கடந்த 10 வருட காலமாக கண்டு கொள்ளாத நிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு போதை தடுப்பு விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை தீவிரமாக நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மாணவர்கள் லேப் டாப்

மேலும், தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் அருகே அமைந்துள்ள மதுபான கடைகளை அகற்றும் பணி  துறை ரீதியாக தொடங்கப்பட்டுள்ளது என்றும், சென்னையில் முதற்கட்டமாக மதுக்கடையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,  வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் கண்டிப்பாக அகற்றப்படும். இதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறினார்.

 மேலும் தேர்தல் அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், மாணவர்கள் கவனக் குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரம் ஆகும் என்பதை கருதி மீண்டும் மடிக்கணினி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அதில் கடந்த ஆட்சியில் 2 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு கொடுக்காமல் விட்டு சென்றுள்ளனர். அதனையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம் என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web