வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்… தமிழக அரசு அதிரடி...

 
பள்ளிகள்

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடினர். இதனிடையே தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு, இருந்தால், தீபாவளி அன்றிரவே பொது மக்கள் அவரவர் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பள்ளிகள்

இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை விடுத்ததன் பேரில் தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்தது.

பள்ளி வாகனம்

இந்நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற நவம்பர் 19 ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை வேலை நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  எனவே தமிழகத்தில் நாளை மறுநாள் 19 ஆம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web