இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!! தலைநகரில் சீரான காற்று !!

 
பள்ளி

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை , எரிக்கப்படும் கழிவுகளால் காற்று மாசுஅடைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காற்று மாசுபாடு
டெல்லியில் வரலாறு காணாத காற்று மாசுபாடு நிலவி வருகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க டெல்லியில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடையை மீறி பட்டாசுகளை பலர் வெடித்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து அபாயகட்டத்தை எட்டியது.அதன்படி கடந்த வியாழக்கிமை முதல் காற்றின் தரக்குறியீடு 450 வரை எட்டியதால் அதிர்ச்சி நிலவியது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

காற்று மாசு

காற்றின் தரம் சீரான பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று உறுதியளித்தார். அதேபோன்று 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.இந்நிலையி டெல்லியில் கடந்த 2 நாட்களாக காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனில் படித்து வரும் மாணவர்களை பள்ளிக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது.இன்று முதல் பள்ளிகள் இயக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமாக வந்து சேர்ந்தனர்.  அதேபோல் அரசு ஊழியர்களுகளும் மீண்டும் அலுவலகம் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web