கதறி துடித்த பெற்றோர்!! மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!!

 
கௌசல்யா


இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. பெற்றோர்கள் இருவரும் பணிக்கு சென்று களைப்பாக வீடு திரும்பிய பிறகு குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்க்கொள்ள அவர்களின் உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தாத்தா, பாட்டி, அத்தை என யாராவது ஒருவர் குழந்தையை கவனித்துக் கொள்ள அம்மா சமையலறையில் வேலைகள் செய்து கொண்டிருப்பாள்.

குழந்தை உயிரிழப்பு

ஆனால் இன்றைய வாழ்க்கை சூழல் அதற்கு ஒத்துழைப்பதில்லை. இதனால் பல நேரங்களில் விபரீதங்கள் விளைந்து விடுகின்றன. சென்னை அம்பத்தூர் அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதி  யுவராஜ் – கெளசல்யா.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.தினமும் கெளசல்யா வீட்டு ஹாலில் குழந்தையை பொருட்களை போட்டு விளையாட விட்டுவிட்டு   தன்னுடைய வீட்டு வேலைகளை பார்ப்பது வழக்கம். அந்த வகையில் அன்றும் வழக்கம் போல் விளையாட விட்டு வேலைகளில் மும்மூரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது வீட்டின் கீழ் பகுதியில் வைத்திருந்த மீன் தொட்டியில் குழந்தையின் விளையாட்டு பொருள் தவறி விழுந்துவிட்டது. இதனை எடுக்க குழந்தை மீன் தொட்டிக்குள் கையை நீட்ட தவறி விழுந்துள்ளது. 


10 நிமிடங்களாக குழந்தையின் சத்தம் எதுவும் கேட்கவில்லையே என எட்டிப்பார்க்க  மீன் தொட்டிக்குள்  குழந்தை தலைகீழாக கிடந்துள்ளது. இதனால் பதறிபோய் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததை கேட்ட பெற்றோர் கதறி அழுதது காண்பவர் கண்ணில் நீரை வரவழைத்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web