கர்நாடகா அருகே சமையலறையில் ரகசிய சுரங்கம்; பெண்களை பதுக்கி வைத்த கொடூரம்…

 
ரகசிய சுரங்கம்

பெங்களூருவில் துர்கா என்ற தனியார் விடுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்  அந்த   விடுதியின் சமையல் அறையில் உள்ள ரகசிய சுரங்கத்தில் பெண்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பெண்களை தவறான தொழிலில் தள்ளி கும்பல் ஒன்று வருவாய் ஈட்டி வருவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பெங்களூரு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் உள்ள பல்வேறு தனியார் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இதில் துர்கா என்ற விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியின் சமையல் அறைக்கு சென்ற போலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சமையல் அறையில் சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர் அதில் உள்ளவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். சுரங்கத்தில் இருந்து கண்ணீருடன் வெளியே வந்த பெண்கள் தங்களின் சம்மதம் இல்லாமல் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை

இதனையடுத்து   மூன்று விடுதிகளில் இருந்து பாலியல் தொழில் ஈடுபட்ட ஏழு பெண்களை போலிசார் மீட்டனர். மேலும் இது குறித்து பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

From around the web