செம அதிரடி! பங்குச் சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து பச்சை நிறத்தில் வர்த்தகம் துவங்கியது!

 
ஷேர் மார்க்கெட்  பங்கு சந்தை

நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் கதறியவர்கள் இன்று சற்று ஆறுதலான நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். வார இறுதி வர்த்தக நாளை  நெருங்கும் நிலையில், வியாழக்கிழமையான இன்றைய வர்த்தகம் நேற்றைய கடுமையான ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் பச்சை நிறத்தில் தொடங்கியது. 

முன்னணி குறியீடுகளான நிஃப்டி 50,  18,050க்கும் மேலான 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் செய்தது. அதே சமயம் S&P BSE சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 60,632 நிலைகளில் வர்த்தகம் செய்கிறது. 

ஷேர் மார்க்கெட்

பரந்துபட்ட சந்தைகளிலும் கூட , நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் 100  என இரண்டுமே 0.9 சதவீதம் வரை உயர்ந்தது. 

கோடக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி, எம்&எம், ஹெச்.சி.எல்., ஐடிசி, மாருதி சுஸுகி ஆகியவை பெஞ்ச்மார்க் குறியீடுகளுக்கு அதிக பங்களிப்பை அளித்தன. இதற்கிடையில், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை குறைந்தன.

நிஃப்டி மீடியாவைத் தவிர, அனைத்துத் துறைகளும் ஓரளவு லாபத்துடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின. நிஃப்டி வங்கி, நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி எனர்ஜி குறியீடுகள் 0.7 சதவீதம் வரை உயர்ந்தன.


ஆசியாவின் பங்குச் சந்தைகள் இன்று சீராக இருந்தாலும், சற்று பலவீனமாகவும்  இருந்தன. கடந்த  மூன்று மாதங்களில் மிகப் பெரிய பின்னடைவுக்குப் பின்னர், முதலீட்டாளர்கள்  பணவீக்கத்தை சமாளிக்க 100 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித உயர்வை அறிவிக்கும் அபாயத்தை கணித்து வைத்திருந்தனர். 

டோக்கியோ பங்குகள் இன்று உயர்வுடன் தொடங்கின. அதே சமயம் வால் ஸ்ட்ரீட்டில் லாபங்கள் பின் தங்கியிருந்தன. முந்தைய நாள் அமெரிக்க பணவீக்கம் பற்றிய கவலைகளால் கூர்மையான இழப்புகளிலிருந்து மீள துவங்கின. ஆரம்ப வர்த்தகத்தில் டாபிக்ஸ் குறியீடு 0.11 சதவீதம் அல்லது 2.14 புள்ளிகள் உயர்ந்து 1,949.60 ஆக இருந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web