இன்று செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!! சென்னை பல்கலைக் கழகம்!!

 
பொறியியல் படிப்பிற்கான நேரடி செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை ஏப்ரல் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று (செப்., 1) www.unom.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகம்

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5 முதல் 14-ம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையெழுத்திட்டு 300 ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15-ம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். 6-வது செமஸ்டரில் ஒரு தாள் மற்றும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு தயாராகும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!!நேரடி செமஸ்டர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!!

மேலும் முதுகலை மாணவர்கள் நான்காவது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும். இவர்கள் தாங்கள் பயின்று கல்லூரி வாயிலாக செப்டம்பர் 5 முதல் 14-ம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் முதுகலை மாணவர்கள் 350 ரூபாயும் எம்.பி.ஏ., எம்.எல். சட்டப்படிப்பு மாணவர்கள் 600 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.இந்த சிறப்பு தேர்வு செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web