கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கேதர்நாத் பாண்டே காலமானார்!

 
கேதர்நாத் பாண்டே

பீகார் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கேதர்நாத் பாண்டே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பீகார் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் கேதர்நாத் பாண்டே (79). மூளை ரத்தகசிவால் பாதிக்கப்பட்ட கேதர்நாத், அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 4 மணியளவில் கேதர்நாத் உயிரிழந்தார்.

கேதர்நாத் பாண்டே

இவர் பீகார் மேல்-சபை எம்.எல்.சி.யாக 4 முறை கேதர்நாத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி உள்ளார். கேதார்நாத் பாண்டே இதுவரை எம்.எல்.சி. ஜெய்மங்கல் சிங் முதல் மூன்று முறை எம்எல்சியாக இருந்த சாதனையை கேதார்நாத் பாண்டே முறியடித்தார்.

கேதார்நாத் பாண்டே பல இந்தி மற்றும் போஜ்புரி நாடக புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் போஜ்புரி நாடக அறிமுகத்திற்காக அகில இந்திய பீகார் போஜ்புரி சாகித்ய சம்மேளனத்தால் ஜகன்னாத் சிங் சம்மான் விருதும் பெற்றுள்ளார். கேதார்நாத் பாண்டே 1975 முதல் 1980 வரை போஜ்புரி இதழான மாதி கே கமக்கையில் பணியாற்றி உள்ளார்.

கேதர்நாத் பாண்டே

கேதர்நாத்தின் மறைவுக்கு பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web