தமிழகத்தில் தொடர் தற்கொலைகள்! அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு!

 
நீதிமன்றம்

சமீப காலங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாணவ, மாணவிகள் அதிகளவிலான மன அழுத்தத்தில் இருப்பது இதற்கு மிக  முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. செல்போன் பார்ப்பதைக் கண்டித்ததற்காக, பட்டுப் புடவைக் கட்டியதற்காக அக்கா திட்டியது என தினசரி வாழ்க்கையில் மிக எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயங்களுக்கும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் சோர்ந்து விடுகின்றனர்.

சமீபத்தில், தனியார் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டதாக கூறப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு அதன் பின்னரும், மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தைப் போக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை. இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அப்போது தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அசன் முகமது ஜின்னா தனது வாதத்தில், டி.ஐ.ஜி. தலைமையில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின் போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் சேனல்கள், 31 டுவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும், மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம் என்றும்,  இது போன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிது படுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்தக் கூடாது என கூறி இந்த  வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web