பாலியல் புகார் எதிரொலி! இயக்குனர் ஷங்கரின் மருமகன் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு!

 
ரோஹித் கிரிக்கெட்

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோஹித் தாமோதரன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி, துத்திபட்டில் இயங்கி வந்த கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்ததால் அதனை சீல் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது தடைகள் நீக்கப்பட்டு மைதானம் இயங்கி வருகிறது. இதற்கிடையில் மைதானம் மூடப்பட்ட காலத்தில் இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி நடைபெற்றது.

ரோஹித் கிரிக்கெட்

அப்போது பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் தனியார் பள்ளியில் 16 வயது சிறுமி 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் எழுந்த புகாரின் புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் வழக்கு தொடரப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரனின் மகன் ரோஹித், பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவரது மகள் ஐஸ்வர்யாவை, ரோஹித் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ரோஹித் கிரிக்கெட்

இந்நிலையில் ரோஹித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மிக ஆழமாகவும், போதுமான அளவு யோசித்தும் நான் ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்து இருக்கிறேன். எனக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்து நான் யார் என்பதை வெளிக்காட எனக்கு துணையாக இருப்பது கிரிக்கெட்தான். எனவே கிரிக்கெட்டு என் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதற்கு எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தால் என்னுடைய மதிப்பு கிரிக்கெட் வட்டாரம் மத்தியில் சீர்குலைந்துள்ளது. எனவே அதில் இருந்து மீண்டு வர நான் நினைக்கிறேன்.

அதற்காக தற்காலிகமாக கிரிக்கெட்டில இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அவதூறு தருணங்களில் எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு எனது நன்றிகள். நான் மீண்டும் சரியான நேரத்தில் வருவேன்’’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ரோஹித்தின் இந்த திடீர் தற்காலிக ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web