அதிர்ச்சி ! ரோந்துப்பணியின்போது மயங்கிவிழுந்து சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்..

 
s

இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன்(58) பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தார்.

இன்று அதிகாலையில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

police

ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உடலுக்கு காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நேரில் அஞசலி செலுத்தி வருகின்றனர். பணியில் இருந்த காவல்துறை அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்தது காவல்துறையினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது. 

From around the web