அதிர்ச்சி!! 13 லட்சம் ரேஷன் கார்டுகள் தகுதி நீக்கம்?! உங்க கார்டை செக் பண்ணீட்டீங்களா?!

 
இன்று முதல் ரேஷன் கடைகளில் அமுலுக்கு வருகிறது!

தமிழகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள்   மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு 2016 முதல் இவர்களுக்கான உணவு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.  குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ளவர்களில் யாரேனும் ஒருவர் வந்து தான் இந்த பொருட்களை வாங்க வேண்டும். வராதவர்களுக்கு  ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது போலி குடும்ப அட்டைகள் ஒரளவு ஒழிக்கப்பட்டுள்ளன.

ரேஷன்
2016க்கு முன் மதுரையில் மட்டும் 9,47,177 குடும்ப அட்டைகள் இருந்தன.  கணினி மயமாக்கப்பட்ட பிறகு அவை  8,38,393 அட்டைகளாகக் குறைந்தன. மீதமுள்ளவை போலியாக கருதி தகுதி நீக்கம் செய்யப்பட்டன. ரேஷன் கார்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், பொங்கல் பரிசு, பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால், குடும்ப அட்டை எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த  வண்ணம் உள்ளன.  இதில், சமீப காலமாக குறிப்பிட்ட சதவீத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வாங்கப்படாமலேயே இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. இந்த கார்டுகள் குறித்து தீவிரமாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க  தமிழ்நாடு உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் விரல் பதிவு கைரேகை

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தற்போது கடைசி 3 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.  அந்தக் குடும்ப அட்டைதாரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு  பொருட்கள் வாங்காததற்கான காரணம் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்படுகின்றன. இவை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கையாக  அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை உயர் அதிகாரி விடுத்த செய்திக்குறிப்பில் தமிழகம் முழுவதும் 13,11,716 குடும்ப அட்டைகளில் சில மாதங்களாக  பொருட்கள் வாங்கப்படவில்லை. இந்த அட்டைகளின் முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை போலி குடும்ப அட்டைகளா அல்லது குடும்பத் தலைவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாமா? வேறு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்திருக்கலாமா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் பலகட்ட விசாரணை,  உறுதி செய்யப்பட்ட பிறகே தகுதி நீக்கம் செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web