அதிர்ச்சி!! பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்டதால் 25 மாணவர்கள் வாந்தி, மயக்கம்!!

 
சத்துணவு

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 164 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். அந்த பள்ளி மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

மாணவர்கள் மருத்துவமனையில்

இந்நிலையில், மாணவர்களுக்கு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்டது. அவர்களில் ஒரு மாணவன், தனது உணவில் பல்லி இறந்து கிடப்பதாக தெரிவித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக அந்த மாணவனுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களை உடனடியாக மீட்டு  மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் மாணவர்களை பரிசோதித்து பார்த்ததில், மாணவர்களுக்கு உடலில் ஒவ்வாமை இருப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து 25 மாணவர்களையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் 164 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், முதல்கட்டமாக 25 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். இதில் ஒரு மாணவனின் உணவில் பல்லி இருப்பது தெரியவந்ததை அடுத்து மற்ற மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாமல் இருந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மாணவர்கள் மருத்துவமனையில்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சமைத்து பரிமாறப்படும் உணவின் தரம் குறித்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 25 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web