அதிர்ச்சி!! புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் காலமானார்!!

 
டொமினிக் லேபியர்

பத்ம பூசன் விருது பெற்ற   பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர்  வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 91. பிரெஞ்சு எழுத்தாளரான டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர்-காலின்ஸுடன் இணைந்து இயற்றிய ஆறு புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகளை தாண்டி விற்பனையாகியுள்ளன. இவர்கள் இயற்றிய "இஸ் பாரிஸ் பர்னிங்?" புத்தகம் உலகப்புகழ் பெற்றது.

டொமினிக் லேபியர்

1985இல் வெளியான 'சிட்டி ஆப் ஜாய்' என்ற நாவல் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதியுள்ளார். அந்த நாவலை தழுவி ஒரு திரைப்படம் 1992 இல் வெளியானது.

டொமினிக் லேபியர்

டொமினிக் லேபியருக்கு 2008ஆம் ஆண்டு குடியரசு தினத்தில், இந்தியாவின் மூன்றாவது உயரிய   விருதான பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. "சிட்டி ஆப் ஜாய்" நாவல் மூலம் தனக்கு கிடைத்த ராயல்டிகளில் பெரும்பகுதியை அவர் இந்தியாவில் பல்வேறு மனிதாபிமான திட்டங்களுக்காக நன்கொடையாக வழங்கி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web