அதிர்ச்சி!! சதுரகிரியில் பெரும் காட்டாற்று வெள்ளம்!! மலையேறத் தடை!!

 
சதுரகிரி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளது. இங்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது.

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை 25 முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மலையில் தங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் மலையடிவாரத்துக்கு இறங்கத் தொடங்கினர். 

இரவில் திடீரென மழை பெய்ததால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து மலையில் இருந்து பக்தர்கள் அடிவாரத்துக்கு இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோயில் பகுதியில்உள்ள கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டனர். 

சதுரகிரி

சுமார் 4,500 அடி கொண்ட இந்த மலை கோவில் தரைமட்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய இந்த கோவிலுக்கு மாதம் 8 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தநிலையில் ஆடி அம்மாவாசை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். அதிக அளவில் பக்தர்கள் வருகையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மலைப்பகுதியில் காட்டாறு வெள்ளத்தின் நீரின் அளவு அதிகரித்து வருவதால் பக்தர்கள் மலைப்பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web