அதிர்ச்சி!! இந்தியாவில் காற்றலை உற்பத்தியின் கிங் துல்சி தந்தி மாரடைப்பால் மரணம்!!

 
துல்சி தந்தி மாரடைப்பால் மரணம்

இந்தியாவில் காற்றலை உற்பத்தியில் முன்னணி நிறுவனமான சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் துல்சி தந்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. காற்றலை உற்பத்தியால் உலகளவில் பல நாடுகளில் தனது வணிகத்தினை செய்து வருபர்  துல்சி தந்தி . இவரது நிறுவனம்  காற்றலை உற்பத்தியில்  நம்பர் ஒன் என்று கூறலாம். சுஸ்லான் எனர்ஜி 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் காற்றாலை உற்பத்தியில் பெரும் புரட்சியினையும்  இவர் ஏற்படுத்தினார். சுஸ்லான் எனர்ஜி, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கிய பங்கினை வகித்து வந்த தலைவரான துல்சி தந்தி,  நிறுவனத்தின் இக்கட்டான சவாலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். மொத்தத்தில் துல்சியின் இழப்பு நிறுவனத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் மட்டும் அல்ல, தொழிற்துறைக்கும் பேரிழப்பு எனலாம். சுஸ்லான் நிறுவனம் அதன் உரிமை பங்கு வெளியீடு மூலம் 1200 கோடி ரூபாயினை திரட்ட திட்டமிட்டு வந்த நிலையில், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தது. இத்தகைய நேரத்தில் துல்சியின் மறைவு, நிறுவனத்திற்கு பெரும் இழப்பாக வந்துள்ளது.

உலகளாவிய அளவில் எனர்ஜி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சுஸ்லான் எனர்ஜி, நம்பகமான ஒன்றாக இருந்து வருகின்றது. மேலும் மலிவு விலையில் தனது சேவையை செயல்படுத்துவதிலும் துல்சி உறுதியாக இருந்தார். செயல்பாடு கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் மோசமான சரிவினைக் கண்ட நிலையில், சுஸ்லான் குழுமமும் பெரும் நிதி சிக்கலில் தவித்தது. எனினும் அத்தகைய இக்கட்டான சூழலில் இருந்து நிறுவனத்தினை மீட்டு, இன்று 1.6 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுக்க மூலகாரணமாக இருந்தவர். இந்நிலையில் இவர் தற்போது மாரடைப்பால்  மரணமடைந்துள்ளது பலரையும்  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web