அதிர்ச்சி!! சல்மான் கான் டூப் கலைஞர் உடற்பயிற்சி கூடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!!

 
சல்மான் கான் டூப்  கலைஞர் சாகர் சல்மான் கான் டூப்  கலைஞர் சாகர்

இந்தி திரையுலகில் பிரபல டூப்  கலைஞர் சாகர். இவர் இந்தி திரையுலகில் மிக பெரிய நடிகரான சல்மான் கானுக்கு டூப் போட்டு வந்துள்ளார். 50 வயது நிரம்பிய சாகர் நல்ல உடற்தகுதிவாய்ந்தவர். தினமும் அவர் உடற்பயிற்சிசெய்து தன்னை கட்டுக்கோப்பாக வைத்து வந்திருக்கின்றார். சமீபத்தில் 'பஜ்ரங்கி பைஜான்' 'டியூப்லைட் ' தபாங் போன்ற திரைப்படங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் டூப் போட்டுள்ளார். இந்நிலையில்  நேற்று சிறந்த உடற்பயிற்சி கூடத்தில் சாகர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென மயங்கி விழந்த அவரை  அங்கிருந்தவர்கள் மீட்டு  அருகில் உள்ள பாலா சாகிப் தாக்கரெ என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  மருத்துவர்கள்  தெரிவித்தனர். நல்ல உடற்தகுதிவாய்ந்த சாகர்  தனது 50வது வயதிலேயே உயிரிழந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு  இவரது இறப்புக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சல்மான்கானும் சாகர் பாண்டேவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். '' என்னுடைய இதயத்தில் என்றும் நீ என்னுடன் இருப்பாய். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் சாகர் சகோதரரே '' என குறிப்பிட்டு தான் இந்த செய்தியால் மிகவும் நொறுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாகர்பாண்டேவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.உடற்பயிற்சியின்போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. கர்நாடகாவின் பவர்ஸ்டார் என குறிப்பிடப்படும் புனித்ராஜ்குமார் இதே போல ஜிம்மில் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தற்போது டூப் கலைஞர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.