அதிர்ச்சி!! தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு கொரோனா!!

 
முத்துச்சாமி

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இருந்த போதிலும் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதே தவிர இன்னும் முழுவதுமாக விலகவில்லை. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டாலும், சில இடங்களில் பாதிப்பு பதிவாகி வருகிறது.பிரபலங்கள், திரைத்துறையினர், முதல்வர், அமைச்சர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், சாமானியர்கள் என்ற பாகுபாடின்றி கொரோனா பரவி வருகிறது. 

கொரோனா
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 436 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 72 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தன.
இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அமைச்சருக்கு கடந்த ஜனவரி மாதமும் கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web