அதிர்ச்சி!! 11ம் வகுப்பிற்கான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தம்!!

 
தொழிற்கல்வி

அரசு பள்ளிகளில் பிளஸ்1 மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை திடீரென்று மூடுமாறு கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘‘அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பிளஸ்-1 வகுப்புகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும். அதிலும் குறிப்பாக தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர்கள் யாரேனும் சேர்ந்து கல்வி பயின்று வந்தால் அவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த திடீர் முடிவு குறித்து நிலவும் காரணங்களில் முக்கியமானதாக, ‘‘ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவு’’ ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

தமிழக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த இந்த திடீர் உத்தரவால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மேலும் இது கல்வியாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் பயில்பவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குடும்பத்து மாணவர்கள்தான். இப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களின் படிப்புகளை, பள்ளிக்கல்வித் துறை மூடி வருவது, வேதனை அளிப்பதாக மூத்த ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.தொழிற்கல்வி பயின்று வரும் மாணவர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்படும் பட்சத்தில் அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web