அதிர்ச்சி! ஹலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் பலி! தேசிய துக்கமாக அறிவித்த அதிபர்!

 
சர்வதேச க்ரைம் குற்றம்

தென் கொரியா நாட்டில் சியோல் நகரில், ஹாலோவீன்  திருவிழா  கூட்ட நெரிசலில்  சிக்கி  151 பேர் பரிதாபமாக உயிரிழந்தது உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த கூட்ட நெரிசலில், 19 வெளிநாட்டவர்களுக்கு பலியானார்கள். ஹாலோவீன் திருவிழாவில் அதிகப்படியான இளைஞர்கள், மற்றும் இளம் பெண்கள் பங்கேற்பது வழக்கம்.

halloween

தென்கொரியாவில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறுவது வழக்கம். தென்கொரிய மக்கள் ஆர்வமுடன் கொண்டாடும் இந்த திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவார்கள். மதசார்பற்ற வகையில் அனைத்து மக்களும் சேர்ந்து அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதற்காக கொண்டாடும் ஒரு திருவிழாவாகும். இந்த ஆண்டு வழக்கம் போல திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் கூட்டம்  குறுகிய தெரு ஒன்றில் திடீரென அதிகரித்ததால், பலரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களில், பெரும்பாலானோர் இளைஞர்கள், மற்றும் இளம் பெண்கள் என்று மீட்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் இதுவரை பலி எண்ணிக்கை 150யைத் தாண்டியுள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தி வந்ததால், கடந்த இரண்டாண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

halloween
மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இறந்தவர்களை மகிழ்விக்க நடைபெற்ற இந்த திருவிழாவில் இவ்வளவு மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த, அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web