அதிர்ச்சி! 2 மடங்கு உயர்ந்தது தக்காளி விலை! இல்லத்தரசிகள் வேதனை!

 
தக்காளி

தக்காளி விலை சரிந்த நிலையில், மீண்டும் ஒரேயடியாக இரண்டு மடங்கு விலை உயர்ந்து, 1 கிலோ தாக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகபடியாக காய்கறி விவசாயம்  செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் லாரிகள் மூலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும்  ஏற்றுமதி  செய்யப்படுகிறது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு விவசாயமும் முழுமையாக பாதிக்கப்படுள்ளது.

இந்தனால் இந்த மாநிலங்களில் விலைவிக்கப்ப்டும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. அதிலிம் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இன்று (செப்.2-ம் தேதி), 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

இதனால், கடந்த வாரங்களில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று மொத்த விற்பனை கடைகளில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தக்காளி விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web