அதிர்ச்சி! சிறைக் கைதிகளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 
கொரோனா

இந்தியாவில் கொரோனா குறைந்து வந்த நிலையில், மீண்டும் சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில், 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அச்சம் நிலவுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகள் இங்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா

இந்நிலையில் அங்குள்ள கைதிகளில் ஒரு சிலருக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் அவர்களை தொடர்ந்து மற்ற கைதிகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் சிறைத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவர்கள் மூலமாக கொரோனா தொற்று பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி 43 சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற சிறைக் கைதிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. 

கொரோனா
இதுகுறித்து மாவட்ட சிறைத்துறை அதிகாரி கூறும்போது, ‘‘425 கைதிகளிடம் இருந்து கொரோனா தொற்று பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சோதனை முடிவில்,  43 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று கூறினார்.

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,87,037 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web