அதிர்ச்சி! ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு! 2 தூதர்கள் உள்பட 20 பேர் பலி! ஆப்கானில் பரபரப்பு!

 
ஆப்கான் குண்டுவெடிப்பு

ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே பயங்கர குண்டு வெடித்து, 2 தூதர்கள் உட்பட 20 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷ்ய தூதரகம் அமைந்த பகுதி அருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எனினும், குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. தூதரகத்திற்கு வெளியே மக்கள் விசாக்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த போது நடந்த தாக்குதலில் பலர் பலியாகி இருக்க கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. 

ஆப்கான் குண்டுவெடிப்பு

இந்நிலையில், குண்டுவெடிப்பில் 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளதாக ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஆர்.டி. என்ற ஊடக தகவல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மிர்ரர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் (தலீபான்கள்), தாக்குதல் நடத்துவதற்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை கண்டறிந்த பாதுகாவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்க செய்திருக்க கூடும் என நம்பப்படுகிறது என செய்தி தெரிவிக்கிறது. 

ஆப்கான் குண்டுவெடிப்பு

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வடமேற்கு பகுதியில் வெள்ளி கிழமை இறைவணக்க கூட்டத்தின்போது, மசூதியில் நடந்த தாக்குதலில், 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில், இறைவணக்க கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய, கிளர்ச்சியாளர்களின் தலைகளையும், திருடர்களின் கரங்களையும் வெட்டும்படி பரிந்துரைத்த மதகுரு மவுலவி முஜிப் ரகுமான் அன்சாரி என்பவரும் ஒருவர் ஆவார். தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் மற்றொரு தாக்குதலில் அந்நாட்டில் 20 பேர் உயிரிழந்திருப்பது உலக நாடுககளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web