அதிர்ச்சி! திடீர் வெள்ளப் பெருக்கு! குற்றால அருவில் குளித்தவர்களில் 2 பேர் உயிரிழப்பு!

 
குற்றாலம்

குற்றால அருவியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து குவிந்துள்ளனர். இந்நிலையில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவில் குளித்து கொண்டிருந்தவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.  இதனால்  அப்பகுதியில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தற்போது தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா சென்றிருந்த 5 பேர் சிக்கியுள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரின் உடல்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தியணைப்பு துறையினர், மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த  மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்,  குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அருவியல் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  மேலும் உயிரிழந்தவர்களின் உடலை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் கூறிய அவர், தற்போது, இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web