அதிர்ச்சி! முகம்மது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி! டி 20 தொடரில் இருந்து வெளியேற்றம்!

 
முகம்மது ஷமி , உமேஷ் யாதவ்

நாளை மறுதினம் துவங்க இருக்கும் டி 20 கிரிக்கெட் தொடரில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 25ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.  

இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய  அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திடீரென இந்திய அணியில் இருந்து முகம்மது ஷமி நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

முகம்மது ஷ்மி உமேஷ் யாதவ்

பின்னர், முகமது ஷமி நீக்கப்பட்டது குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், இந்திய வீரர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க முடியாது எனவும்  பிசிசிஐ தெரிவித்துள்ளது 

ஐசிசி

முகம்மது ஷமிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில்  இடம் பெற்றுள்ளார்.  சமீபத்திய சர்வதேச போட்டிகளில் தரமான பந்து வீச்சை முகம்மது ஷமி வெளிப்படுத்தி வந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web