அதிர்ச்சி! ப்ளஸ்-2 மாணவி கடத்தல்! மடக்கி பிடித்த பெற்றோர்!

 
விஜி

ப்ளஸ் 2 பயிலும் மாணவியை இருசக்கர வாகனத்தில் வாலிபர் கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை ஒருதலையாக வாலிபர் காதலித்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் காலனி தெருவில் வசித்து வருபவர் சேகர். இவரது மகன் விஜி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 பயின்று வரும் ஒரு மாணவியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனையறிந்த அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பிறகு மாணவியின் பெற்றோர் விஜியை கண்டித்துள்ளனர்.

Jayamkondam

இந்நிலையில் 12 பயிலும் மாணவி, பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பள்ளிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஜி மற்றும் அவரது நண்பர் பாலாஜி உதவியுடன் 16 வயது மாணவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் மாணவியின் பெற்றோர்களுக்கு, வலுக்கட்டாயமாக தங்களது பெண்ணை யாரோ இருவர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்வது குறித்து தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மீன்சுருட்டி கடை வீதியில் அவர்களை தடுத்து நிறுத்தினர். பெற்றோர்கள் தனது மகளைக் கேட்ட போது தன்னை வற்புறுத்தி காதலிக்க கூறினார்கள் என்றும், காதலிக்கவில்லை என்றால் கொலைச் செய்து விடுவதாகவும் மிரட்டியதால், நானும் காதலிப்பதாக மாணவி கூறியுள்ளார். இதை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

arrest

தனது மகளை மயக்கி தனிமையில் அழைத்துச் செல்ல திட்டமிட்ட விஜி மற்றும் அவரது நண்பர் பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் கடத்த முயன்ற விஜி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாலாஜி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web