மீண்டும் அதிர்ச்சி! தனியார் பள்ளியின் மாடியிலிருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி!

 
போலீசார்

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீநிதி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைச் செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கிலேயே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், செங்கல்பட்டு, ஊரப்பாகத்தில் மேலும் ஒரு 10ம் வகுப்பு மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 10ம் வகுப்பு மாணவி நசீமா, கணித பாடத்தில் தோல்வியடைந்ததால், பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பாலாஜி நகரில் வசித்து வருபவர் நசீமா (16). இவர் அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நிலையில், மாணவி நசீமா, கடந்த இரண்டு மாதங்களாகவே பள்ளியில் சரிவர படிக்கவில்லை என கூறப்படுகிறது.

jump

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி நசீமா, தான் சரியாக படிக்கவில்லை என்று உணவு இடைவேளை வரையில் வருத்தமாகவும்,  அதிக மன அழுத்தத்தில் சோகமாகவும் இருந்ததாக தெரிகிறது. பின்னர், பிற்பகலில் பள்ளி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர், பள்ளியின் 3வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் மாணவி நசீமாவுக்கு முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடி உள்ளார். திடீரென மாணவி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தது கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவி நசீமா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Guduvancherry

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web