தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்!! கடன் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

 
லோன் ஆப்

சமூக வலைதளங்களை பயன்படுத்தி சிலர் குற்றங்களில் ஈடுபடும் சம்பவம் அதிரிகரித்து வருகிறது. இந்நிலையில் லோன் ஆப் மூலம்  கடன் வாங்கிய பெண் கடனை திருப்பி செலுத்திய பின்னரும் அவரிம் புகைப்படத்தை     ஆபாசமாக சித்தரித்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மிரட்டல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த   பட்டதாரி பெண், ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற முயற்சி செய்தார். அப்போது அதில் ஆதார் கார்டு, பான்கார்டு, புகைப்படம் ஆகியவற்றை பதிவிடும்படி குறிப்பிட்டிருந்தது. அதில் இருந்த அனைத்தையும் பதிவேற்றம், செய்த அவர், ரூ.20 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை தேவைக்கு செலவு செய்துவிட்டு சரியான நேரத்தில் அந்த பணத்தையும் அவர் திரும்பி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த குறுந்தகவலால் அவர் அதிர்ச்சியடைந்தார்.  அதில், நீங்க வங்கி கணக்கிற்கு மேலும் பணம் செலுத்த வேண்டும், இல்லையென்றால் உங்களது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என குறிப்பிட்டிருந்தது.

மிரட்டல்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். பணத்தை விட மானம்தான் முக்கியம் என்று எண்ணி அவர்கள் கேட்ட பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அந்த பெண் பயந்துவிட்டதை அறிந்த மர்மநபர்கள், ஆபாச படத்தை சித்தரித்து அவரது தொலைபேசிக்கு அனுப்பி தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதனால் அச்சமடைந்த பெண் பல்வேறு தவணைகளாக ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 340-ஐ செலுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த பெண், இதுகுறித்து க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இதுத்தொடர்பாக  வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web