நள்ளிரவில் தோட்டத்து காவலாளி மீது துப்பாக்கி சூடு! பழனியில் பரபரப்பு!

 
காவலாளி

தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குற்றச்செயல்களில் கொரோனா காலத்திற்கு பிறகு ஈடுபடுவது அதிகரித்துள்ளது. மக்களின்  மன அழுத்தமே இதற்கு காரணம் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். பழனி அருகே, தனியார் தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் மீது, நள்ளிரவில் துப்பாக்கி சூடு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுடபட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் காவலாளி கார்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்து உள்ள மானூர் ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் கார்த்தி (24). கும்பகோணத்தை சேர்ந்த இவர் தோட்டத்தில் தங்கியிருந்து காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 12 மணி அளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதில் திடீரென கார்த்தியின் நெஞ்சில் ஒரு குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த கார்த்தி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

Palani

இதையடுத்து தோட்டத்தில் இருந்த சிலர், நெஞ்சில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த கார்த்தியை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கார்த்தியின் நெஞ்சில் பட்ட குண்டை பழனி அரசு மருத்துவமனையில் அகற்ற முடியாமல் மேல்சிக்கிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்‌.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி தாலுகா போலீசார் கார்த்தியை சுட்ட இடத்தில் கீழே விழுந்த துப்பாக்கி குண்டுகளை சேகரித்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசாரிடம் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் தர மறுத்து விட்டனர்.

Neikkarapatti

காவலாளி கார்த்தியை துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? எதற்காக சுட்டனர்? வேட்டையாட வந்த நபர்கள் சுட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார்த்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக தொடர்ந்து உள்ளதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web