மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு!! 9 பேர் பலி!! தொடரும் வன்முறை கலாச்சாரம்!!

 
துப்பாக்கி


அமெரிக்காவில் மத்திய மெக்சிகோவில் அமைந்துள்ளது குவானாஜுவாடோ மாகாணம். இங்கு அபாசியோ எல் ஆல்டோ நகரில் அமைந்துள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  2 பேர் படுகாயமடைந்தனர். இந்த மதுபான விடுதியில்  கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு திடீரென உள்ளே புகுந்தது. கையில் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து அங்கே இருந்தவர்கள் மீது சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த 5 ஆண்கள், 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

துப்பாக்கி சூடு

மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில்  மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக மெக்சிகோவின் தொழில்துறை மையமான குவானாஜுவாடோ பகுதியில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

துப்பாக்கி

அக்டோபரில்  இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோவின்  ஜனாதிபதியான ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், மெக்சிகோவில் தலைவிரித்தாடும் வன்முறைக் கும்பலை குறைக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என 2018ல் உறுதியளித்திருந்தார். எனினும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web