கார் விபத்தில் குறும்பட தயாரிப்பாளர் பலி!! 5 பேர் படுகாயம்!! கோவிலுக்கு சென்ற போது சோகம்!!

 
ஜெகதீஷ்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் அருகே வெங்கடாத்திரி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகதீஷ் ஆச்சார்யா (50). இவரது மனைவி மாதவி (45). இவர்களுக்கு யாமினி (23) என்ற மகளும், ரவி தேஜா (22) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஜெகதீஷ் ஆச்சார்யா தனது குடும்பத்துடன் மற்றும் உறவினர்கள் வாணி (80), பிரியா (23) ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் தங்களது சொந்த ஊரிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

விபத்து

தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்று இரவு 6 பேரும் காரில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காரை ஜெகதீஷ் ஆச்சார்யா ஓட்டிச் சென்றார். சோளிங்கர் - சித்தூர் மாநில நெடுஞ்சாலை தாமரைக்குளம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரவி தேஜா சிகிச்சை பெற்றதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். 

போலீஸ்

ஆனால் செல்லும் வழியிலேயே ரவி தேஜா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான ரவி தேஜா ஐதராபாத்தில் தெலுங்கு குறும்படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web