சற்றே குறைந்த தங்கம்!! இல்லத்தரசிகள் ஆறுதல்!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதல் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே இரட்டிப்பு மடங்காக உயர்ந்து விடுகிறது.இதனால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் நகைக்கடை
இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்கத்தின் மீதான மவுசு என்றும் குறைவதில்லை. நடுத்தரவர்க்கத்தினர், இல்லத்தரசிகளின் மிகப்பெரிய சேமிப்பாக தங்கம் இருந்து வருகிறது. நவம்பர் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ1000க்கும் அதிகமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்றும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டநிலையில் இன்று சற்றே குறைந்துள்ளது.

தங்கம்

அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது இல்லத்தரசிகளிடையே சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4950க்கும்,  சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை ரூ1.30 குறைந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.20 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1300 குறைந்து, ரூ.67,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web