1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்!! அரசு அதிரடி அறிவிப்பு

 
ஸ்மார்ட் போன்

1.35 கோடி குடும்ப த் அலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளில் இப்போதே கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு இலவச இணைய இணைப்பும் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் , அதில் ஒரு சிம் ’ப்ரைமரி ஸ்லாட்டாக’ இருக்கும்.

ஸ்மார்ட் போன்

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தை செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. ரூ.12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன்கிழமை முதல் நடந்து வருகிறது.

girl mobile பெண் மொபைல், வாட்ஸ் அப் செல்போன்

நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்கான ஏலத்தில் கலந்துகொண்டுள்ளன. டெண்டரை வழங்கிய தனியார் நிறுவனமான வோடபோன் ஏலத்தில் ஆஜராகவில்லை. உயர்மட்டக் குழு மதிப்பீட்டிற்குப் பிறகு இந்த மாதம் ஏலதாரர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று திட்ட பொறுப்பாளர் சத்ரபால் சிங் தெரிவித்தார். 

வரும் பண்டிகை காலம் தொடங்கும் முன்பே முதல் தவணை ஸ்மார்ட்போன்களை நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web