இன்றுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைகிறது.. தீபாவளிக்கு மறுநாள் ‘சித்ரங்’ புயல் கரையைக் கடக்கும்!

 
புயல்

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த வருடத்திலேயே இரண்டாவது முறையாக  மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளவை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து கொண்டுதானிருக்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், தென்மேற்குப் பருவ மழை இன்றுடன் விலக அதிக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இன்றுடன் விலகினாலும், வங்க கடலில் உருவாகி வரும் ‘சித்ரங்’ புயல் காரணமாக மழை தீபாவளி வரையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள், அக்டோபர் 25ம் தேதி புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தீபாவளியன்று காலை புயலாக வலுப்பெறும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை

தீபாவளிக்கு அடுத்த நாள், அக்டோபர் 25ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்த பின்னர், அடுத்த நாளான அக்டோபர் 26ம் தேதி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்ரங் புயல் கடல் பரப்பில் இருக்கும் ஈரப்பதம் முழுவதையும் கரையைக் கடக்கும் போது ஈர்த்துக் கொள்ளும் என்பதால், வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் வலுவாக இருக்காது என கூறப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் இது குறித்து தெரிவித்ததாவது, "புயலால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் வலுவிழந்த பிறகு தான் இயல்பு  நிலைக்கு திரும்பும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும். அத்துடன் புயல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொண்டு செல்வதால் பருவமழை வலுவாக தொடங்குமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

கன மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை, நாளை மறுதினம் (அக்டோபர் 24, 25-ம் தேதிகளில்) ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26-ம் தேதி ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web