ஸ்ரீரங்கத்தில் சிறப்பு கட்டண நுழைவு சீட்டு அதிகரிப்பு!!

 
சொர்க்கவாசல்

திருச்சி மாநகரில் பிரசித்தி பெற்ற பல கோவில்கள் அமைந்திருந்த போதிலும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் ஆண்டின் அனைத்து நாட்களும்   ஏதாவது ஒரு திருவிழா நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இருந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பெருமாளை அருகிருந்து சேவித்தால் மறுஜென்மம் கிடையாது என்பது ஐதிகம். வைகுண்ட ஏகாதசியை  திருஅத்யயன உற்சவம் எனவும் அழைப்பர். 

சொர்க்கவாசல்
பூலோகம் முழுவதும் 108 வைணவ திருத்தலங்கள் இருந்த போதிலும்  காவிரித்தாயின் மடியில்  கொள்ளிடம் ஆற்றுத்தீவில் அமைந்திருப்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலில், இங்கு 365 நாட்களுமே  விழாக்களுக்கு பஞ்சமிருக்காது வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவது வழக்கம். இந்த புறப்பாட்டு நேரத்தில் பெருமாளை அருகிலிருந்து பார்க்க விரும்புபவர்களுக்கு சிறப்பு கட்டணமுறை  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


 இவ்விழா அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 2ம் தேதி  நடைபெற உள்ளது. அன்றே பரமபதவாசல் திறக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக நடை முறையில் இருந்த பெருமாள் புறப்பாட்டு நேர தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சந்தனு மண்டபத்திலிருந்து தரிசிக்க ரூ.3000 ஆக இருந்த கட்டணம் நடப்பாண்டு முதல் ரூ. 5000ஆகவும் கிளிமண்டபத்திலிருந்து பெருமாள் புறப்பாட்டை சேவிக்க இதுவரை இருந்த ரூ. 500 கட்டணம் ரூ.1000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா! டிசம்பர் 14 திருச்சியில் உள்ளூர் விடுமுறை!!
மக்களிடம் கருத்து கேட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை நிர்வாக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதனால் இந்த கட்டண உயர்வு முறை  உடனடியாக நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கேட்டதை எல்லாம் உடனுக்குடன் அள்ளிகொடுக்கும் கடவுளுக்கு நாமும் அள்ளிக் கொடுக்கத்தான் வேண்டும் என்கின்றனர் சேவார்த்திகள். 

From around the web