இன்று ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!! ஒரு வார ஓய்வு அவசியம்!! மருத்துவமனை அறிக்கை!!!

 
ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இருந்த போதிலும் அமைச்சர்கள், பிரபலங்கள், மருத்துவர்கள், சாமானியர்கள் என பாரபட்சமின்றி பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 ஸ்டாலின்

இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததால் ஜூலை 14ம் தேதி  சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறி கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 

ஸ்டாலின்
மேலும் ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அவர் உடனடியாக கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், சிகிச்சை முடிந்து முதல்வர் ஸ்டாலின் இன்று  ஜூலை 18ம் தேதி திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு வார காலத்திற்கு அவர் ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web