”ஸ்டாலின் என்னுடைய சகோதரர் ”!! மம்தா உருக்கம்!!

 
ஸ்டாலின் மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். மம்தா மேற்குவங்க ஆளுனர் இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து மம்தா சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் டிஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  அனைவரும்  உடன் இருந்துள்ளனர்.

ஸ்டாலின் மம்தா


இந்த சந்திப்பிற்கு பிறகு இரு முதல்வர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அதில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ மம்தா பேனர்ஜி  இதற்கு முன் பல முறை தமிழகம் வந்திருந்த போதிலும் தற்போதைய வரவு பெருமை அடைகிறது.  கலைஞர் சிலையை முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்து திமுகவையும், தமிழத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு  மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே

ஸ்டாலின் மம்தா

. அவசியம் மேற்கு வங்கத்திற்கு வர வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை.’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  அதன் பிறகு பேசிய மம்தா  தமிழக  முதல்வர் ஸ்டாலின் என்னுடைய சகோதரருக்கு இணையானவர். கவர்னர் அழைப்புக்காக தமிழகம் வந்துள்ளேன். அந்த சமயத்தில் முதல்வரை சந்திக்க வந்தேன் எனக் கூறிய பிறகு   தமிழில் வணக்கம் கூறினார் மம்தா.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web