ஸ்டாலின் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தார்!

 
ஸ்டாலின்

ஜூலை  12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடியை அழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த பயணம் ரத்தானது. எனவே தொலைபேசியில் பிரதமர் மோடி மு.க.ஸ்டாலின்உடல் நலம் குறித்து விசாரித்தார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஸ்டாலின்

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் போட்டிக்கான தேர்தலில் கலந்து கொண்டு தனது வாக்கினை அளித்தார். நாட்டில் தற்போதைய குடியரசு தலைவராக பதவி வகித்து வருபவர் ராம்நாத்கோவிந்த. இவரது பதவிக் காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, இன்று நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின்

தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முள்பட நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தலில் வாக்களிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து நேரடியாக தலைமைச் செயலகம் சென்றார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உள்ள வாக்கு பெட்டியில், தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web