அடுத்த 3 நாட்கள் கவனமா இருங்க மக்களே!! வெதர்மேன் எச்சரிக்கை ரிப்போர்ட்!!

 
மழை

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும்.

மழை

இதனால் அடுத்து வரும் 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும்  தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 23ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யலாம். தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களுக்கு வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலம் அருகில் இருக்கும் துறைமுகத்திற்கு திரும்பும்படி செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. 

மழை

இது குறித்து வெதர்மேன் விடுத்த செய்திக்குறிப்பில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மேற்கு பகுதி உக்கிரமாக தெரிகிறது. அவை வட தமிழகம் நோக்கி வந்தால்  பரவலாக கனமழை பெய்யலாம். இல்லையெனில் மழை விட்டு விட்டு பெய்யும். மேகக்கூட்டம் அருகில் வரும்போதுதான் சொல்ல முடியும்.
இன்று நவம்பர் 19ம் தேதி சனிக்கிழமையும், நாளை நவம்பர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மழை இருக்காது. நாளை மறுநாள் நவம்பர் 21ம் தேதி  திங்கட்கிழமை முதல் மழையின் ஆட்டம் ஆரம்பிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web