ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு!! உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ50 லட்சம் வழங்க பரிந்துரை!!

 
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு

தமிழகத்தில் 2018ல் மே 22ம் தேதி   தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட  துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்த உண்மை நிலையை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு
இந்த அறிக்கையில்  17 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது,  துப்பாக்கி சூட்டிற்கான  முந்தைய, பிந்தைய நிகழ்வுகள் என்னென்ன என்பது குறித்து  பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!
இந்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அந்த அறிக்கையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் துப்பாக்கி சூடு குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என  ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web