கல்லா கட்டிய கோவில் உண்டியல்!! ரூ.100 கோடி வருமானம்!!

 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

 

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரையின் ஆன்மிக அடையாளமாக மட்டுமன்றி, தொன்மைக்குரிய பெருமிதமாகவும் திகழ்ந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் மதுரை, வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மீனாட்சி அம்மனை தரிசித்து செல்கின்றன.   இதன் காரணமாக இக்கோவிலைச் சார்ந்துள்ள பொருளாதாரம் மதுரையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இதனிடையே கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் கோவிலின் உள்ளே பக்தர்கள் வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அவற்றில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் மீண்டும்   மீனாட்சியம்மன் கோவில் களைக்கட்ட தொடங்கியுள்ளது.  இதன் காரணமாக நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்களின் காணிக்கையைப் பெறுவதற்கு கோவிலுக்குள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனாட்சியம்மன் கோவிலின் உண்டியலில் மட்டும் எவ்வளவு வசூலாகியுள்ளது? என்பது குறித்து மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ தன்னார்வலர் முத்துப்பாண்டி என்பவர் கோவில் நிர்வாகத்திடம் தகவல் கேட்டிருந்தார். அதில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கி 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 100 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரத்து 913 ரூபாய் வசூலாகியுள்ளது தெரியவந்துள்ளது.

From around the web